games

img

பக்கோடா விற்கும் தேசிய வில்வித்தை வீராங்கனை.... 2 முறை தங்கம் வென்றும் கண்டுகொள்ளாத பாஜக அரசுகள்.....

ராஞ்சி:
2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வரும்போது, பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது, ஆண்டுக்கு 2 கோடிஇளைஞர்களுக்கு வேலை தருவேன் என்பதாகும். 

ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின்னர்தான், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் 7 சதவிகிதம் வரை அதிகரித்தது. 2018-ஆம் ஆண்டு, இதனை நேரடியாகபிரதமர் மோடியிடம் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர், நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வேலைவாய்ப்பு அளித்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத பிரதமர் மோடி, “ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என் றால், அதுவும் வேலைவாய்ப்புதான்” என்றுகூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அந்தநேரத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற அமித்ஷா, தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சில்- பிரதமர் மோடியின்‘பக்கோடா’ வேலைவாய்ப்பை பிரமாதமாகபேசி, அந்த அதிர்ச்சியை அதிகப்படுத்தினார்.ஆனால், நாடு முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்தன. படித்து வேலைவாய்ப் பில்லாமல் இருக்கும் இளைஞர்களை பிரதமர் மோடி கேலி செய்வதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இளைஞர்களும் ஆங்காங்கே பக்கோடா விற்கும் போராட்டம் நடத்தி, தங்களினை எதிர்ப்பைக் காட்டினர்.

இந்நிலையில்தான், வில்வித்தையில் தேசிய அளவில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற மம்தா டுட்டு (Mamta Tuddu)என்ற வீராங்கனை நிஜமாகவே, குடும்பவறுமை காரணமாக ராஞ்சி சாலையோரத்தில்பக்கோடா விற்பனை செய்து வரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தின்தாமோதர்பூர் கிராமத்தில் வசித்து வரும் மம்தாடுட்டு, வில்வித்தையில் 2010-ஆம் ஆண்டு ஜூனியர் மற்றும் 2014-ஆம் ஆண்டு சப் -ஜூனியர் பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். ராஞ்சி வில்வித்தை பயிற்சி மையத்தில்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர், கொரோனாகாரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது, வயது முதிர்ந்த பெற்றோரைக் கொண்ட தனது குடும்பம் வறுமையில் வாடுவதைப் பார்த்த அவர், தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் காப்பாற்ற தற்போது ராஞ்சி சாலையோரத்தில் பக்கோடா, காய்கறிகள் மற்றும் அரிசிமாவு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். 2 தங்கப்பதக்கங்களைப் பெற்றும், 23 வயதிற்கு உள்ளாகவே விளையாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதுதொடர்பாக மம்தா பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், ராஞ்சி வில் வித்தை பயற்சி மையத்திடம் உதவி கேட்டும், தனக்கு ஒரு பதில்கூட கிடைக்கவில்லை என்றும், தன்னுடைய இந்த நிலைக்கு மத்திய - மாநில அரசுகளே காரணம் என்றும் வேதனையைக் கொட்டியுள்ளார்.2009 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மம்தா-வுக்கு பயிற்சியளித்த வில்வித்தை பயிற்சியாளர் முகமது சாம்ஷாத் (Shamshad) பேசும்போது, மம்தா மிகவும் திறமையானவர்; அவரின் தற்போதைய நிலை தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.வில்வித்தையில் வாங்கிய மடல்களை வீட்டில் குவித்து வைத்துள்ள மம்தா, அரசிடமிருந்து முழுமையான உதவி கிடைத்தால் மட்டுமே தன்னுடைய வில்வித்தை பயிற்சியை தொடர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

;